நாளை மறுநாள் பந்த் பஸ் ஊழியர்கள் 40% பங்கேற்பார்கள்: சிஐடியு தகவல்
சென்னை: சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சவுந்தரராஜன் எம்எல்ஏ சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசு அண்மையில் டீசல் விலையை உயர்த்தியது. மேலும் சமையல் கேஸ் சிலிண்டர் வழங்குவதில் கட்டுப்பாடு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் 20ம்தேதி பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதில் சிஐடியு, ஏஐடியுசி, தேசிய முற்போக்கு தொழிலாளர் பேரவை, பகுஜன் தொழிற்சங்கம் உள்ளிட்ட போக்குவரத்து கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளும். அன்றைய தினம் போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த எங்கள் 4 அமைப்பை சேர்ந்த 40 சதவீதம் பேர் பணிக்கு வராமல் ஸ்டிரைக்கில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு சவுந்தரராஜன் கூறினார்.