அரியலூர்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா காருக்குடியை சேர்ந்தவர் மணிகண்டன். (25). இவர் அதே பகுதியை சேர்ந்த சந்தியா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்தார். அந்த பெண் சம்மதிக்காததால் 2009 ஏப்ரல் 11ம் தேதி நண்பர்கள் வேலுச்சாமி, முத்துலிங்கம், விஜயகுமார், சிட்டிபாபு ஆகிய 4 பேருடன் அவரை காரில் திருவண்ணாமலைக்கு வலுக்கட்டாயமாக கடத்தி சென்றார். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிந்து திருவண்ணாமலையில் அந்த பெண்ணை மீட்டு 5 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி தங்கராசு, மைனர் பெண்ணை கடத்திய மணிகண்டன் உள்ளிட்ட 5 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">