Untitled Document
2012
18
Sep
இலங்கை ஜிம்பாப்வே முதல் மோதல் கொண்டாட்டங்கள் இல்லாமல் தொடங்குகிறது 20: 20 திருவிழா

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

20: 20 உலககோப்பை கிரிக்கெட் திருவிழா இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா மைதானத்தில் இன்று தொடங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே உலககோப்பை போட்டி என்றால் துவக்கவிழாக்கள் பிரமாண்டமாக நடத்தப்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால் இம்முறை முற்றிலும் மாறாக எந்தவித கொண்டாட்டங்கள் இல்லாமல் 20: 20 ஆட்டங்கள் தொடங்குகிறது. கலை நிகழ்ச்சிகள் கிடையாது. கண்ணுக்கு விருந்தளிக்கும் நடிகர், நடிகைகளின் குத்தாட்டமும் மிஸ்சிங். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசு தொகை யாக ரூ.5.5 கோடி வழங்கப்பட உள்ளது.
இன்று தொடங்கும் திருவிழா வருகிற 7ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 27 ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று சி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை  ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இலங்கை அணியில் இம்முறை அனுபவ வீரர்களுடன் துடிப்பான இளம்வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

தில்ஷானுடன் புதுமுக வீரர் தில்ஷன்முனவீரா களமிறங்க வாய்ப்புள்ளது. அதேபோல் இளம் சுழற்பந்து வீச் சாளர் தனஞ்ஜெயாவுக் கும் வாய்ப்பு கிடைக்கக்கூடும். மலிங்காவின் யார்க்கர் எதிரணிக்கு சவாலாக இருக்கும். தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் இலங்கை களமிறங்குகிறது. ஜிம்பாப்வே அணி சமீபகாலமாக குறிப்பிடும்படி சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை. அந்த அணி பிரன்டன் டெய்லர் தலைமையில் களமிறங்குகிறது. மசகட்சா, சிபந்தா நட்சத்திர வீரர்களாக உள்ளனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
T20 World Cup 2012,ICC World Cup Twenty20 2012,Twenty20 2012,Twenty20 2012 Schedule,Twenty20 2012 Venues,Twenty20,Twenty20 in Tamil