| |||||
|
2012
16
Sep ![]() லண்டன் :இங்கிலாந்து ஜூனியர் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மேலாடை இல்லாமல் இருக்கும் படங்களை பிரான்ஸ் வார இதழ் வெளியிட்டது. அதை பார்த்து அயர்லாந்து, இத்தாலி பத்திரிகைகளும் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் , டயானாவின் மகன்கள் வில்லியம்ஸ், ஹாரி. இவர்களில் வில்லியம்ஸ், கேத் மிடில்டனை திருமணம் செய்து கொண்டார். ஹாரிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நியூயார்க்கில் விடுமுறையை கழிக்க சென்ற ஹாரி, ஓட்டலில் இளம்பெண்களுடன் நிர்வாணமாக இருக்கும் படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், வில்லியம் , கேத் மிடில்டன் தம்பதி, விடுமுறையை கழிக்க சமீபத்தில் பிரான்ஸ் சென்றது. அங்கு மிடில்டன் மேலாடை இல்லாமல் வில்லியம்சுடன் சுற்றிய படங்களை பிரான்சில் இருந்து வெளிவரும் குளோசர் என்ற பிரபல வார இதழ் அட்டை படமாக நேற்று வெளியிட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து ராணி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வார இதழுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடுக்க போவதாக ராணி குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கேத் மேலாடை இல்லாமல் இருக்கும் 4 படங்கள் குளோசர் இதழில் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தின் வருங்கால ராணியை பாருங்கள், இதுபோல் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.. இனிமேலும் பார்க்க முடியாது என்று படவிளக்கங்கள் தந்துள்ளது. மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
munees - Rajapalayam
9/16/2012 -- 15:58:56 aranmannai vi2ku ithuoru avamaam natarajan - chennai
9/16/2012 -- 16:42:37 இங்கிலாந்தின் வருங்கால ராணியை பாருங்கள், இதுபோல் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.. இனிமேலும் பார்க்க முடியாது.....இனிமேலும் பார்க்க முடியாது என்று சொல்லமுடியாது.இதைவிட இன்னும் மோசமான படங்கள்கூட பார்க்க முடியும். DHANAPAL.S - CHENNAI
9/17/2012 -- 11:0:22 Dont public like this news. Because she have a one of the nation king wife..
|
|