இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டாரஸ், பயிற்சியாளர் ஆன்டிபிளவர் ஆகியோருடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து முன்னணி வீரர் பீட்டர்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். உலககோப்பை 20,20க் கான அணியிலும் அவர் இடம்பெறவில்லை. தென்ஆப்ரிக்காவிற்கு எதிரான தொடரிலும் அவர் விளையாடவில்லை. இந்த சூழ்நிலையில் அடுத்த மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இதற்கான அணியில் பீட்டர்சன் இடம்பெறுவது குறித்து விவாதம் நடந்து வருகிறது. அவரை அணி யில் சேர்க்க வாரியத்தினர் விரும்பவில்லை. ஆனால் கேப்டன் குக் வலிமை யான அணி வேண்டும் என கேட்டு வருவதாலும், பீட்டர்சனோடு அவருக்கு நல்ல நெருக்கம் இருப்பதாலும் இந்திய தொட ரில் பீட்டர்சன் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">