Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2012
11
Sep
போதை ஊசி போட்டு செக்ஸ் டார்ச்சர்? திருப்போரூரில் வாலிபர் தற்கொலை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


திருப்போரூர் :கடன் மற்றும் செக்ஸ் டார்ச்சர் காரணமாக திருப்போரூரில் வாலிபர் ஒருவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் பற்றி கூறப்பட்டிருக்கும் தகவல்கள் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்போரூர் புதுத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (31). இன்டர்நெட் மையம் நடத்தி வந்தார். இவருடைய மனைவி புவனேஸ்வரி. மகன் முகிலன். மகள் வர்ஷினி. தண்டலத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு பிள்ளைகளுடன் நேற்று காலை புவனேஸ்வரி சென்று விட்டார். ரமேஷ் தனியாக இருந்தார். அதனால், மைத்துனர் கண்ணன் நேற்று இரவு சாப்பாடு எடுத்து கொண்டு பைக்கில் ரமேஷ் வீட்டுக்கு வந்தார். கதவு பூட்டியிருந்தது. தட்டி பார்த்தார். திறக்கப்படவில்லை. உடனே ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். ரமேஷ், மின் விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதை பார்த்ததும் கண்ணன் அதிர்ச்சி அடைந்து கதறினார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று, தூக்கில் தொங்கிய ரமேஷை கீழே இறக்கினார். பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர், ஏற்கனவே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருப்போரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். ரமேஷின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, ரமேஷ் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு பண்ணி விட்டேன். என்னால் இனிமேல் வாழ முடியாது. நான் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தேன். அவர் பெயர் டாக்டர் சுமிதா. சென்னையில் ஒரு கிளினிக் வைத்துள்ளார்கள். அவர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்கள். திருப்போரூரில் சில ஆட்களை வைத்து மிரட்டுகிறார். என்னால் அந்த டார்ச்சரை தாங்க முடியவில்லை. எனக்கு அவர்கள் நிறைய இன்ஜெக்ஷன் போட்டுள்ளார்கள். (தூக்கம் + போதை) அவர்களுடன் என்னால் நேருக்கு நேர் போராட முடியவில்லை. அதனால் இந்த முடிவுக்கு வந்துவிட்டேன். புவனா என்னை மன்னித்து விடு.. குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள். குழந்தைகளை அடிக்காதே.. அந்த டாக்டர் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. புவனாவின் அண்ணன் கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மிரட்டல் விடுத்ததாக கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் பெண் டாக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
Jayaprakash - Chennai
9/11/2025 -- 17:32:6

Ivar seithathu miga miga kozhaithanam , ithanal ivarathu manaivi ipothu than pillaigalai eppadi karai serpar....

sekar - salem
9/12/2024 -- 11:11:32

ஆண்களை இப்படி கொடுமை படுத்தும் பெண்கள் நாட்டில் அதிகம் ஆகி விட்டார்கள். பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண், செக்ஸ் டார்செர் கொடுக்கும் பெண்கள் , இப்படியே போனால் ஆண் உரிமைக்காக போராடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

kumar - chandigarh
9/12/2024 -- 15:57:21

போடா முட்டாள்....ஒரு பெண்ணிற்காக பயந்து இறந்து விட்டாய் நீ, உன் குழைந்தைகள்,மனைவி நிலைமை ....?

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement