Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
09
Sep
ஒரு பாட்டிலுக்கு ரூ.5 டாஸ்மாக் சரக்கு விலை நாளை முதல் உயர்கிறது? ஆண்டுக்கு ரூ.720 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்


சென்னை: டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.5 உயர்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.720 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். தமிழகத்தில் மதுக்கடைகளை டாஸ்மாக் நிறுவனம் நடத்தி வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி கிடைக்கிறது. மாநிலத்தில் 6,820 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள், மது பாட்டில்களில் ஒட்டப்பட்டுள்ள அதிகப்பட்ச சில்லறை விற்பனை விலையை காட்டிலும் அதிக விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதிக விலை விற்பவர்கள் மீது அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும், அதிக விலைக்கு விற்பதை நிர்வாகத்தால் தடுக்க முடியவில்லை. மது பாட்டில்களின் விலை ரூ.65, ரூ.75, ரூ.85 என இப்போதுள்ளது. இதனால் மது வாங்குபவர்களுக்கு சில்லறை பிரச்னையில் 5 ரூபாய் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண எல்லா டாஸ்மாக் கடைகளிலும் 2 மாதத்துக்குள் பில்லிங் மிஷின் வழங்கப்பட உள்ளது. பில்லிங் மிஷின் நடைமுறைக்கு வரும் போது, மது பாட்டில்களின் விலைகளை, ரூ.70, ரூ.80, ரூ.90 என மாற்றி அமைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் குடிமகன்களுக்கு விற்பனையாளர்கள் சில்லறை வழங்க பிரச்னை இருக்காது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

மதுக்கடைகளில் ரூ.5 சில்லறை இல்லை என்று சொல்ல கூடாது என்பதற்காக, குவாட்டர், ஆப், புல் பாட்டில்களின் விலையை ரூ.5 உயர்த்த டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இன்னும் இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.  சாதாரண குவாட்டர் ரூ.65க்கு விற்கப்படுகிறது. இனி ரூ.70 ஆக உயரும். நடுத்தர மது குவாட்டர் பாட்டில் ரூ.75க்கு விற்கப்படுகிறது இனி ரூ.80க்கு விற்கப்படும். ரூ.85க்கு அதிகமாக விற்கப்படும் மது, பிரிமியம் வகை எனப்படுகிறது. இவை ரூ.85க்கு பதில் ரூ.90க்கு விற்கப்படும். மார்பியஸ், எம்ஜிஎம், அப்சல்ஸ் உள்ளிட்ட பிராந்தி வகைகள், குவாட்டர் பாட்டில் விலையும் ரூ.5 கூடுகிறது. இதேபோல் ஆப் மற்றும் புல் பாட்டில்களுக்கும் ரூ.5 விலை கூடுகிறது. விலை உயர்வால் ஆண்டுக்கு ரூ.720 கோடி டாஸ்மாக்குக்கு வருவாய் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
yuvaraj - chennai
9/9/2025 -- 21:15:11

போங்கடா நீங்களும் உங்க ஆட்சியையும் திருத்தவே முடியாது. எல்லாரும் குடிச்சி நாசமா போறதுல என்ன ஒரு சந்தோசம்

V. Thirugnanam - Thiruvallur
9/10/2025 -- 9:16:44

மது விற்பனையில் இத்தனை அக்கறை செலுத்தும் அரசு, தனியார் பள்ளிக் கட்டணங்களை பற்றி கவலைபடாமலும் அல்லது கண்டுகொள்ளாமலும் இருப்பதில் என்ன நியாயம்? கல்வியா அல்லது மதுவா கடவுளுக்கு தான் வெளிசம் .

Thirunavukkarasu - Thanjavur
9/10/2025 -- 10:48:1

1000 அனாலும் நாங்கள் குடித்துகொண்டே இருப்போம்

manikandan - tirupur
9/10/2025 -- 10:55:43

no eat hot drinks this spoiled in our health

KUDIMAGAN - CHENNAI
9/10/2025 -- 11:7:12

நாட்டில் எவளு பிரச்சனைகள் உள்ளன ஆனால் இந்த அரசு டாஸ்மாக் முகியதவும் கொடுப்பது மிக வேதனையக்ஹா உள்ளது நாட்டில் பசி பட்டினி கொள்ளை கற்பழிப்பு ஊழல் எவளு இருக்கு டாஸ்மாக் கடை ரொம்ப முக்கியம் முதலமிச்சர் வரும்போது எதோ ஒரு பொய் சொல்லி வருகிறார்கள் ஆனால் யாரு வந்தாலும் அநியாயம் தொடர்டுகொண்டே இருக்கு இது எல்லாம் விட்டுட்டு எதனை கோடி வருமானம் என்று கணக்கு போடுகிறர்கள் வாழ்க தமிழ்நாடு வளர்க குடிமகன்கள்

benny - aden
9/10/2025 -- 11:21:51

நல்ல வருவீக நல்ல ஆட்சி சய்வீக

sivakumar - thiruvallur
9/10/2025 -- 11:34:29

5 ரூபாய்க்கு பதில் 10 ருபாய் கொள்ளை அடிக்கபோறான் governmentukku 720 கோடி லாபம் விக்கிரவனுக்கு 1440 கோடி லாபம் பாவம் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கிற ஏழைக்கு 2160 கோடி நஷ்ட்டம் ???

Elanchezhian - chennai
9/10/2025 -- 13:1:22

அக்டோபர் இரண்டு டாஸ்மார்க் ஷாப் மூடப்படும் என்று தொலைகாட்சில அறிவிபுபு. ஆனால் வருடர்திற்கு 720 கோடி லாபம். கடவுளே வுன்மையே பேசுங்கப்பா.மேடம்............

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana