பி.இ. பட்டதாரிகளுக்கு எம்ஆர்பிஎல் நிறுவனத்தில் உதவி தொகையுடன் அப்ரன்டிஸ் பயிற்சி
மங்களூரில் உள்ள பொதுத்துறை நிறுவனமான Mangalore Refinery and Petrochemical Ltd.,ல் காலியாக உள்ள பல்வேறு துறைகளுக்கான அப்ரன்டிஸ்ஷிப் பயிற்சி பணிகளுக்கு பி.இ. முடித்த மற்றும் இந்த கல்வியாண்டில் படிப்பை முடிக்கும் மாணவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி; கிராஜுவேட் அப்ரன்டிஸ் இன்ஜினியர்கள். மொத்த இடங்கள்: 20 (பொது11, எஸ்சி3, எஸ்டி1, ஓபிசி5). தகுதி: கெமிக்கல்/ மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பி.இ. பட்டம்.
பயிற்சி காலத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.mrpl.com.in இணையதளத்தை பார்க்கவும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
DGM (HR), Mangalore Refinery Petro Chemicals Ltd., Post Kuthethur, Mangalore 575030.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.14.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: செப்.28.