| |||||
|
2012
06
Sep திருவொற்றியூர்: பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மணலி அருகே பெரிய சேக்காடு பகுதியை சேர்ந்தவர் குமாரி (26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு குமாரி செல்போனிற்கு ஆபாச எஸ்எம்எஸ் வந்தது. தவறுதலாக யாராவது அனுப்பியிருப்பார்கள் என்று குமாரி அதை பெரிது படுத்தவில்லை. தொடர்ந்து அதே செல்போன் எண்ணிலிருந்து குமாரிக்கு ஆபாச எஸ்எம்எஸ், மிஸ்டு கால் வர ஆரம்பித்தது. இது குறித்து குமாரி கணவரிடம் தெரிவித்ததோடு மாதவரம் பால் பண்ணை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியவர் சவுக்கார் பேட்டையை சேர்ந்த பிரபு (29) என்பது தெரியவந்தது. பிரபுவை நேற்று போலீசார் கைது செய்து விசாரித்ததில் இது போல் பல பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி வலை விரித்தது தெரியவந்தது. கைதான பிரபுவை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
rajesh - madurai
9/6/2025 -- 18:36:6 idhu romba nalla irukku Arun - Chennai
9/7/2025 -- 7:22:26 நன்றாக உள்ளது இந்த இதழ் மூலமாக நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி !!!!!! meeran - kilakarai
9/7/2025 -- 13:12:45 இது போன்ற விஷயங்கள் எல்லா இடத்திலும் நடக்கின்றன.பெண்கள் அவர்கள் பெயரும் கெட்டுவிடும் என்று பயபடுகின்றனர்.பெண்களின் விவரம் வெளியில் தெரியாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை அறிவிப்பு வெளியிட்டால் ஏகபட்ட புகார்கள் வந்து சேரும்.இதை தடுக்கவும் முடியும்.
|
|