Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
02
Sep
உல்லாசத்தை பார்த்ததால் ஆத்திரம் : 8 வயது சிறுவன் வெட்டி கொலை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சூளகிரி :எட்டு வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். சிறுவனின் அண்ணியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கள்ளக்காதல் ஜோடியை நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பா (50). இவரது மனைவி மாதம்மாள் (45). இவர்களது மூத்தமகன் சங்கர் (25). மருமகள் கலா (24). வீட்டின் பின்புறம் வசித்து வருகின்றனர். திம்மராயப்பாவின் கடைசி மகன் சதீஷ் (8). அங்குள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்தான்.  நேற்று பள்ளிவிடுமுறை என்பதால் வீட்டின் பின்புறம் சதீஷ் விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில் மாலை 6 மணியை தாண்டியும் மகன் வீட்டுக்கு வராததால் மாதம்மாள் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில் அருகில் உள்ள தோட்டத்தில் சாக்கு மூட்டை ஒன்றில் இருந்து ரத்தம் வழிந்ததை பார்த்த அப்பகுதியினர், மூட்டையைப் பிரித்து பார்த்தனர். அதில் சதீஷ் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவனது தலையின் பின்புறம் பலத்த வெட்டுக்காயம் இருந்தது. தகவல் அறிந்து வந்த பெற்றோர் சிறுவனின் உடலைப் பார்த்து கதறினர். தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. உடல் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த நாய், சங்கர் வீட்டின் முன் சுற்றி வந்து குரைத்தது. பின்னர் வீட்டின் முன் படுத்துக்கொண்டது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கிருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
சிறுவனின் அண்ணி கலாவிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சிறுவனை கலாவும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து படுகொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சதீஷின் அண்ணி கலாவிற்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. சங்கர் வேலைக்கு செல்லும் நேரத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நேற்று பிற்பகலில், கலா தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை சதீஷ் பார்த்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த கலா மற்றும் அவரது கள்ளக்காதலன், சதீஷ் யாரிடமாவது சொல்லி விட்டால் பிரச்னையாகி விடும் என்று அச்சம் அடைந்து அவனை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். சிறுவனை வீட்டிற்குள் அழைத்துச்சென்று அவன் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் சதீஷ் துடிதுடித்து இறந்துள்ளான். இதைத்தொடர்ந்து சிறுவனின் உடலை சாக்குப்பையில் போட்டு கட்டி, அருகில் உள்ள தோட்டத்தில் வீசி உள்ளனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
parthiban - chennai
9/2/2025 -- 13:16:56

எல்லாத்துக்கும் காரணம் பெண்களே

rajesh - salem
9/3/2025 -- 8:0:52

இது போன்ற அவலங்கள் கிராமங்களிலும் தொடர் கிறதே என்று மிகவும் வருத்தமாக உள்ளது .

Nenapillai - U.A.E
9/3/2025 -- 12:17:53

அரபுனாட்டின் சட்டம் தண்டனை போல் இந்தியாவிலும் சட்டம் தண்டனை இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும் மனித மிருகங்களின் அட்டகாசமும் இல்லாது போகும்

S.YEGNA RAMAN - TUTICORIN
9/3/2025 -- 12:45:26

இந்த மாதிரி நாய் எல்லாம் தூக்குல போடணும்

லோகு - கரூர்
9/20/2012 -- 6:59:17

உடல் பசிக்கு உயிர் எடுத்த உத்தமிக்கு ஊருக்கு நடுவே தூக்கு தூத்திரிநாயே

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana