நிர்வாண காட்சி சர்ச்சையால் பேஸ் புக்கை மூடினார் ஹாரி
லண்டன்: நட்சத்திர ஓட்டலில் இளம்பெண்களுடன் நிர்வாணமாக இருந்த காட்சிகள் வெளியானதால் ஏற்பட்டுள்ள சர்ச்சையை அடுத்து, தனது பேஸ் புக் கணக்கை மூடிவிட்டார் இங்கிலாந்து இளவரசர் ஹாரி. இங்கிலாந்து இளவரசர் ஹாரி (27), விடுமுறையை ஜாலியாக கழிக்க சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். லாஸ் வேகாஸ் நகரில் நண்பர்களுடன் நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அப்போது நீச்சல் குளத்தில் இளம்பெண்களுடன் அவர் ஜாலியாக இருந்தார். மேலும் ஓட்டல் அறையில் நிர்வாணமாக இளம்பெண்ணுடன் இருப்பது போன்ற படங்கள் பத்திரிகைகள், இணைய தளத்தில் வெளியாகின.
இதனால் ராணி குடும்பத்துக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. படங்களை வெளியிட கூடாது என்று ராணி குடும்பத்தினர் எச்சரித்தனர். எனினும், தொடர்ந்து படங்கள் வெளியாகி இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த படங்கள் மேலும் வெளியாகலாம் என்று ஹாரிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் தனது பேஸ் புக் கணக்கை மூடிவிட்டார். அந்தரங்க செயலாளர் ஜெமி லோதர் பிங்கர்டன் அறிவுரையை ஏற்று பேஸ் புக் பக்கத்தை மூடியுள்ளார் ஹாரி. பேஸ் புக்கில் ஹாரிக்கு 400க்கும் அதிகமான நண்பர்கள் தொடர்பு வைத்திருந்தனர். லாஸ் வேகாஸ் ஓட்டலில் ஹாரியுடன் இருந்த மிக நெருங்கிய நண்பர்கள் டாம் (25), ஆர்தூர் லேண்டன் (30) ஆகியோரும் தங்கள் பேஸ் புக் பக்கத்தை மூடியுள்ளனர்.