வடகிழக்கு மின்சக்தி கழகத்தில் பி.இ. படித்தவர்களுக்கு வாய்ப்பு
மேகாலயாவில் உள்ள மத்தியஅரசு நிறுவனமான North Eastern Electric Power Corporation Limited™ காலியாக உள்ள பல்வேறு பணியிடங் களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டிரெய்னி இன்ஜினியர் (சிவில்)10, டிரெய்னி இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல்)10, டிரெய்னி ஆபீசர் (ஜியாலஜி) 4, டிரெய்னி ஆபீசர் (ஐடி)5, மெடிக்கல் ஆபீசர்4, செக்யூரிட்டி ஆபீசர்1, அசிஸ்டென்ட் மேனேஜர்1, டெபுடி மேனேஜர்2 கம்பெனி செக்ரட்டரி1, டிரெய்னி பெர்சனல் ஆபீசர்4, டிரெய்னி அக் கவுன்ட்ஸ் ஆபீசர் 6, டெபுடி மேனேஜர் (நிதி)4.
விண்ணப்ப கட்டணம்: ரூ.500/ஐ NEEPCO Ltd என்ற பெயரில் மாற்றத்தக்க வகையில் ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டிடி எடுக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுவர். கல்வித் தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.neepco.gov.in இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : செப்.5.