| |||||
|
2012
22
Aug சென்னை: வக்கீல், சமூக சேவகி என்று கூறி இளைஞர்களை மயக்கி பணம் பறித்த இளம்பெண்ணை பிடிக்க போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் சரவணன் (33). சின்னதாக அலுமினிய நிறுவனம் நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவரை தொடர்பு கொண்ட இளம்பெண் ஒருவர், செல்போன் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறினார். பின்னர் அடிக்கடி தொடர்பு கொள்ள ஆரம்பித்தார். போனிலேயே இனிக்க இனிக்க பேசி அவரை தனது வலையில் விழ வைத்தார். வக்கீலுக்கு படித்து வருவதாகவும் அதற்கு பணம் தேவைப்படுகிறது என்றும் கூறி சரவணனிடம் ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார். அதன்பிறகு அந்த பெண்ணின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. அடையார் செல்போன் கடையில் வேலை செய்யும் மற்றொரு சரவணன் (28) என்பவரிடமும் இதே பாணியில் போனில் தொடர்பு கொண்டு அறிமுகமானார் அந்தப் பெண். காதலிப்பதாக அவர் கூறிய ஆசை வார்த்தைகளை சரவணன் நம்பினார். ‘என் தோழி திருமணத்துக்கு செல்ல வேண்டும். அணிந்து செல்ல நகை எதுவும் இல்லையே’ என்று இளம்பெண் புலம்பி உள்ளார். பரிதாபப்பட்ட சரவணன், ஒன்றரை பவுன் நகை வாங்கி கொடுத்துள்ளார். நகையை பெற்றுச் சென்ற பெண், செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
muthu kumaran - nellai
8/22/2012 -- 15:35:16 no grils. no tention karthick - dharmapuri
8/23/2012 -- 10:13:34 ப்ளீஸ் அர்ரெஸ்ட் பண்ணுங்க.மற்றும் கடுமை ஆனா தண்டனை குடுங்க nithyanandha - maduraiaadhinam
8/23/2012 -- 12:15:11 குண்டலினி யாகம் நடத்த இருக்கிறேன் தயவு செய்து இந்த சிஷ்யை இன் விலாசத்தை கொடுக்கவும் logesh - savignyletemple
8/23/2012 -- 12:58:26 ஆண்கள்களை விட பெண்கள் இது அதிகம் ஈடுபடுகிறார்கள். Be careful Boys. arunkumar - dharmapuri
8/24/2012 -- 13:10:20 emarupavarkalai விட emarupaval தான் குற்றாவாளி அதனால் அந்த பெண் செய்தது சரி
|
|