6 பவுன் நகைக்காக இளம்பெண் கழுத்து அறுப்பு
உளுந்தூர்பேட்டை : விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நெய்வணை கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்வி (18), சுப்பிரமணி (20). உறவினர்களான இருவரும் கரும்பு வெட்டும் தொழில் செய்து வந்தனர். நேற்று இரவு செல்வியை ஏரி பகுதிக்கு அழைத்து சென்ற சுப்பிரமணி, திடீரென அவரது கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். பின்னர் அவர் அணிந்திருந்த 6 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். அந்த வழியாக சென்றவர்கள், மயங்கிகிடந்த செல்வியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து சுப்பிரமணியை தேடி வருகின்றனர்.