கீ1.71 லட்சம் மதிப்புள்ள வாழைகளை வெட்டியவர் கைது
களக்காடு : களக்காடு அருகே உள்ள வடுகச்சிமதிலை சேர்ந்தவர் ஆறுமுகம் (42). இவருக்கும் டோனாவூரை சேர்ந்த கணேசன் (37) என்பவருக்கும் நில தகராறு இருந்து வந்தது. ஆறுமுகம் வாங்கிய நிலத்தில் தனது குடும்பத்தினருக்கும் பங்கு உள்ளது என கணேசனின் அம்மா, எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தார். ஏர்வாடி போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். இந்நிலையில், அந்த நிலத்தில் ஆறுமுகம் பயிரிட்டிருந்த வாழைகளை கணேசனும், அவரது மைத்துனர் கண்ணனும் அரிவாளால் வெட்டி அழித்தனர். வெட்டப்பட்ட வாழைகளின் மதிப்பு ரூ 1.71 லட்சம் ஆகும். இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்கு பதிந்து கணேசனை கைது செய்தனர். கண்ணனை தேடி வருகின்றனர்.