நம்பர்1 டெஸ்ட் அந்தஸ்து இங்கிலாந்து 346 ரன் இலக்கு
தென் ஆப்ரிக்கா - இங்கிலாந்து மோதும் 3வது டெஸ்ட் லண்டனில் நடந்து வருகிறது.
தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 309 ரன் எடுத்தது. இங்கிலாந்து 315 ரன் எடுத்தது. அதன்பிறகு விளையாடிய தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சில் 351 ரன் எடுத்தது. ஆம்லா சிறப்பாக விளையாடி 121 ரன் விளாசினார். டிவிலியர்ஸ் 43, பிலாந்தர் 35, டும்னி 26, காலிஸ் 31, பீட்டர்சன் 24, ஸ்மித் 23 ரன் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் பின் 4, ஸ்வான், பிராடு, ஆன்டர்சன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பிறகு 346 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது.
ஸ்ட்ராஸ் 1, குக் 3 ரன்னில் பிலாந்தர் பந்துவீச்சில் அவுட்டானார்கள். 4வது நாள் ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 16 ரன் எடுத்திருந்தது. இந்த டெஸ்டில் வெற்றி பெற இன்னும் 330 ரன் தேவை. 8 விக்கெட்டுகள் கைவசம் உள்ளன. இதில் தோல்வி அடைந்தால் நம்பர்1 டெஸ்ட் அந்தஸ்தை தென் ஆப்ரிக்காவிடம் பறிகொடுக்க வேண்டிய சூழ்நிலையில் கடைசி நாள் ஆட்டத்தில் இன்று இங்கிலாந்து விளையாடுகிறது.