| |||||
|
2012
19
Aug புதுடெல்லி :டெல்லி ரெட் லைட் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 5 சிறுமிகள் மீட்கப்பட்டனர். தலைநகர் டெல்லியின் ரெட் லைட் பகுதியான ஜி.பி. ரோட்டில் சிறுமிகளை அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது கர்நாடகாவை சேர்ந்த 5 சிறுமிகளை மீட்டனர். அவர்கள் 15 முதல் 20 வயது வரை உள்ளவர்கள். இவர்களை டெல்லியில் நல்ல வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்து வந்து விபசார கும்பலிடம் விற்றது தெரியவந்தது. சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வர்ஷா (40) என்ற பெண் கைது செய்யப்பட்டார்.
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
raja - chennai
8/19/2012 -- 17:40:11 என்ன கொடுமை சார் இது Carbon.R - Chennai
8/20/2012 -- 7:51:36 Kill lady
|
|