Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
05
Aug
விபசார ஜோடியை நிர்வாணமாக இழுத்து சென்ற போலீஸ்காரர்கள் : பாகிஸ்தானில் பரபரப்பு


இஸ்லாமாபாத் :விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறி ஆணையும் இளம்பெண்ணையும் போலீஸ்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து சென்றனர். இதனால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ளது காயிர்புர் மாவட்டம். இங்குள்ள கம்பாத் என்ற கிராமத்தில்  வசிப்பவர் மும்தாஸ் மிர்பகர், வர்த்தகர். சிந்து முதல்வர் காயிம் அலி ஷா இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்தான். இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி, மிர்பகர் வீட்டுக்கு 2 இளம்பெண்கள் வந்துள்ளதாகவும், அவர்கள் விபசாரத்தில் ஈடுபடுவதாகவும் போலீசில் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் மிர்பகரையும் அங்கிருந்த 2 பெண்களையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் மிர்பகர் மற்றும் ஒரு பெண்ணின் உடைகளை வலுக்கட்டாயமாக கழற்றி நிர்வாணமாக்கினர். மற்றொரு பெண்ணை ஒன்றும் செய்யவில்லை. பின்னர் 3 பேரையும் கிராம தெருக்களிலும் அவர்களை போலீசார் இழுத்து சென்றனர். அந்த காட்சியை போலீசாரும் உள்ளூர் மக்களும் படம் எடுத்துள்ளனர். இந்த காட்சிகள் இன்டர்நெட்ல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதுகுறித்து தகவல் பரவியதும், சம்பந்தப்பட்ட 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மிர்பகருக்கு மட்டும் உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், பெண்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், போலீசாரின் அராஜகத்தை எதிர்த்து சிந்து உயர் நீதிமன்றத்தில் மிர்பகர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு வரும் 8ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்ல போலீசார் முயற்சித்த போது, உள்ளூர் பெண்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் அவர்களை போலீசார் மிரட்டி விரட்டி அடித்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana