காஞ்சிபுரம்: சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து போளூருக்கு நேற்றிரவு 148 அரசு விரைவு பஸ் புறப்பட்டது. உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் அருகே சென்றது. அந்த பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் இறங்குவதற்காக நெல் மூட்டைகளுடன் சாலையோரம் நின்ற லாரி மீது அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில், திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த கண்டக்டர் விநாயகமூர்த்தி (32), பயணிகள் சென்னை எழும்பூரை சேர்ந்த சுரேஷ் மருது (40), தரமணியை சேர்ந்த மணிகண்டன் (23) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். டிரைவர் கிருபாகரன் (35) மற்றும் 10 பணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உத்திரமேரூர் போலீசார் சென்று, காயம் அடைந்தவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook