ரயில்வேயில் 2 லட்சம் பணியிடங்கள் நிரப்ப எஸ்ஆர்எம்யூ வலியுறுத்தல்
கோவை :தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யூ) நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நடந்தது. தலைவர் ராஜாஸ்ரீதர் பேசியதாவது:
ரயில்வே துறையில் உள்ள 2 லட்சம் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். ரயில் டிரைவர், டிராக்மேன், கேட் மேன் உள்பட ரயில்வே தொழில்நுட்பம் சார்ந்த ஊழியர்களுக்கு தினசரி வேலை நேரம் 12 மணி என்பதில் இருந்து குறைத்து, தினசரி 6 முதல் 8 மணி நேரம் வேலை நேரமாக மாற்றியமைக்க வேண்டும். ரயில்வே தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பதவி உயர்வை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
பழைய பென்ஷன் திட்டப்படி ஓய்வு பெறும் ஊழியர்கள் 50 சதவீதம் பென்ஷன் பெற்றனர். தொழிலாளர்களுக்கு ஏமாற்றத்தை தரக்கூடிய புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் 2013 மார்ச் 31ம் தேதி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு ராஜா ஸ்ரீதர் பேசினார்.