காஞ்சியில் பாமக போராட்டம் : 296 டாஸ்மாக் கடைக்கு பூட்டு
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைக்கும் நாளை பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்படுகிறது. இது சம்பந்தமாக, பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன் வௌ¤ய¤ட்ட அறிக்கை: காஞ்சிபுரத்தில் உள்ள 296 டாஸ்மாக் கடைகளுக்கு நாளை காலை 10 மணிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும். மகளிர் அணி, இளம்பெண்கள் அணி, பாட்டாளி இளைஞர் சங்கம், மாணவர் சங்கம் ஆகியவை கலந்துகொள்கின்றனர். முன்னாள் எம்எல்ஏ சக்தி கமலம்மாள், மாவட்ட செயலாளர்கள் பரந்தூர் சங்கர், குமரவேல், மாவட்ட தலைவர் குமாரசாமி, கோபால கண்ணன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். பாமகவினர் அதிகளவில் கலந்துகொள்ளவேண்டும். இதற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்.