ஆலந்தூர் :விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பொன் விழாவையொட்டி அவருக்கு 500 கிராம் பொற்காசுகள் வழங்கும் விழா மடிப்பாக்கத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடக்கிறது. மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் தலைமை வகிக்கிறார். அகரன், அறிவமுதன், இரா.செந்தில், சீராளன், வழக்கறிஞர் கண்ணன் முன்னிலை வகிக்கின்றனர். தகடூர் தமிழ்ச்செல்வன் வரவேற்கிறார். விழாவில், முனைவர் நாகநாதன், சிந்தனை செல்வன், எழுத்தாளர் ரவிகுமார், முகமது யூசுப், உஞ்சை அரசன், பாவரசு ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். இசையரங்கம், கவி அரங்கம், கொடை அரங்கம், வாழ்த்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சியை வன்னியரசு தொகுத்து வழங்குகிறார். விழாவில், எழில் கரோலின், ஷாநவாஸ், இளஞ் சேகுவரா, எழில் இமயன், ஸ்ரீதர் கண்ணன், சஜஇன்பராஜ், ராஜலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். முடிவில், திருமாவளவன் ஏற்புரையாற்றுகிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook