2010ம் ஆண்டு கலெக்டர் காரி பாரியா படத்தில் நடித்த பூமிகா அதன்பிறகு தற்போது ‘ஏப்ரல் பூல்’ என்ற தெலுங்கு படத்தில் ஜெகபதி பாபு ஜோடியாக நடிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இங்லிஷ் விங்லிஷ்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் ரீஎன்ட்ரியாகும் ஸ்ரீதேவி நடித்த படம் தெலுங்கிலும் அதேபெயரில் செப்டம்பர் 21ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி’ படத்தில் ஏற்கனவே வெ.பிரபுவின் ‘சென்னை 28‘ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அதே டெக்னிஷியன் குழு பணியாற்றுகிறது.
பாலிவுட் ஷூட்டிங் பெரும்பாலும் ஹாலிவுட் ஸ்டைலில் நடக்கிறது என்பது அசின் கருத்து.
சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜா தனது பேஸ்புக்கில் கடுமையான விமர்சனங்கள் வருவதால் பேஸ்புக்கில் இருந்து விலகிவிட்டார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook