லவ் பட ஹீரோவுக்கு திடீரென்னு படம் ரிலீஸ் ஆகறதுல சிக்கல் ஆயிடுச்சாம்... ஆயிடுச்சாம்... வருஷகணக்கா பட ரிலீஸ் இல்லாததால மவுசு கொறஞ்சிபோச்சாம். சமீபத்துல தியேட்டர் பங்ஷனுக்கு போன நடிகர யாருமே கண்டுக்கலையாம். அதேவிழாவுக்கு வந்த பெரிய ஹீரோவுக்கு ஆரவாரமா வரவேற்பு கொடுத்தாங்களாம். இதபாத்து நொந்துபோன லவ் ஹீரோ யார் கிட்டயும் சொல்லிக்காம வெளியேறிட்டாராம்... வெளியேறிட்டாராம்...
சவுத் ஹீரோயின்களுக்கு குடிக்கற பழக்கம் அதிகம்னு சனா ஹீரோயின் சமீபத்துல துடுக்கா பேசி வாங்கி கட்டிகிட்டாராம்... கட்டிகிட்டாராம்... இனிஷியலுக்கு பேர் மாறின ஹீரோவோட நடிச்சப்ப, ‘இன்டஸ்ட்ரி நம்மலபத்தி பேசணும்னா மத்தவங்களபத்தி விமர்சனம் பண்ணணும்‘னு அட்வைஸ் தந்தாராம். அத மனசுல வச்சிகிட்டுதான் சனா ஹீரோயின் சவுத் ஹீரோயின்கள பத்தி தப்பு தப்பா கருத்து சொன்னாராம்... சொன்னாராம்...
கோலிவுட்ல செட்டிலாயிட்ட கல்லூரி ஹீரோயின் டுவிட்டர் பக்கத்த திடீர்னு எரஸ் பண்ணிட்டாராம்... பண்ணிட்டாராம்... இதுல தொடர்புகொள்றவங்க தன்ன தர்மசங்கடத்துல ஆழத்துறாப்ள கேள்விகேட்டு மனச உடைக்கறாங்களாம். பொறுத்து பாத்தவருக்கு மனசு ஆறலையாம். ஹீரோக்களோடு லிங்க்பண்ணி சில குறும்பு ரசிகருங்க வல்கரா மெசேஜ் அனுப்புறாங்களாம். இந்த கோபத்துல ஹீரோயின் டுவிட்டர் பக்கத்த இழுத்து மூடிட்டாராம்... மூடிட்டாராம்...
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook