மும்பை: எந்த கேரக்டராக இருந் தாலும் அதற்காக 100 சதவீத உழைப்பை தருபவர் இந்த¤ சூப்பர் ஸ்டார் ஆமிர் கான். யஷ் சோப்ரா தயாரிப்பில் அவர் நடிக்க உள்ள படம் Ôதூம் 3Õ. இந்திய சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர்களில் ஒருவராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் யஷ் சோப்ரா. ஆனால் அவரே மிரண்டு போகும் வகையில் கடந்த மூன்று மாதங்களாக Ôதூம் 3Õ படத்தை தள்ளிப்போட்டு வருகிறார் ஆமிர் கான். முதல் தடவை ஷூட்டிங் நடக்க இருந்தபோது, Ôசத்யமேவ ஜயதேÕ டிவி நிகழ்ச்சியில் பிசியாக இருக்கிறேன் எனக் கூறி படப்பிடிப்பை தள்ளிப்போட்டார் ஆமிர். படத்தின் கதைப்படி ஆமிர் கான் ஜிம் உடல்கட்டுடன் நடிக்க வேண்டும். இதற்காக முழுமையாக ரெடி ஆகாததால் 2வது முறையாக ஷூட்டிங்கை தள்ளிப்போட்டார். கடைசியாக ஜூன் 29ம் தேதி ஷூட்டிங் தொடங்கலாம் என ஆமிர் கூறியிருந்தார். யஷ் சோப்ராவும் ஓகே சொன் னார். ஆனால் திட்டமிட்டபடி ஜூன் 29ல் ஷூட்டிங் தொடங்கவில்லை. மேலும் பத்து நாட்களுக்கு படப்பிடிப்பை தள்ளிப்போட்டுவிட்டார் ஆமிர். காரணம், ஹேர் ஸ்டைல். வழக்கமாக தனது படங்களுக்கு ஹேர் ஸ்டைல் கலைஞராக பணியாற்றும் அவன் என்பவரையே Ôதூம் 3Õக்கும் தேர்வு செய்தார் ஆமிர். இருவரும் சேர்ந்து இந்த கேரக்டருக்காக பல்வேறு ஸ்டைல்களில் தலைமுடியை மாற்றிப்பார்த்தனர். ஆனால் திருப்தி தரவில்லை. கதைப்படி சர்வதேச ஹைடெக் கொள்ளையனாக ஆமிர் கான் நடிக்கிறார். அதற்கேற்ப லுக் வேண்டும் என மெனக்கெடுகிறார் ஆமிர். ஷூட்டிங் தாமதம் ஆவதால் அதிர்ச்சியடைந்த யஷ் சோப்ரா, அதிருப்தியில் உள்ளாராம். ஆனால் இது பற்றி யஷ்சோப்ராவின் மகனும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான ஆதித்ய சோப்ரா கூறுகையில், 'எது பெஸ்ட் என்பது ஆமிருக்கு நன்றாக தெரியும். அவர் ஏதாவது செய்கிறார் என்றால் அது படத்தின் நன்மைக்காகவே இருக்கும்' என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook