திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த மீனா மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். அதற்கு அச்சாரமாக விளம்பர படமொன்றில் பிரகாஷ்ராஜுடன் நடிக்கிறார்.
மலையாளத்தில் காமெடி நடிகர் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டாராம் பிரியாமணி.
கடந்த ஒன்றரை வருடமாக எய்ட்ஸ் விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட ஸ்கிரிப்ட் ஒன்றை தயாரித்து வருகிறார் பிரியதர்ஷன். இதில் ஆமிர்கானை நடிக்க கேட்டபோது, முழு ஸ்கிரிப்டையும் எழுதி தரும்படி கேட்டிருக்கிறாராம்.
அஹமத் இயக்கத்தில் ‘என்றென்றும் புன்னகைÕ படத்தில் முதன்முறையாக இணைகிறது ஜீவா,த்ரிஷா ஜோடி.
சித்தார்த் நடித்த ‘காதலில் சொதப்புவது எப்படிÕ படத்தை இயக்கிய பாலாஜி மோகன் தனது காதலி அருணாவை விரைவில் மணக்க உள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook