தென் ஆப்ரிக்க அணி சுழற்பந்து வீச்சாளராக உள்ள இம்ரான்தகீர் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர். சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு வந்த அவர் மாஜி வீரர் அப்துல்காதிரிடம் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். தென் ஆப்ரிக்கா , இங்கிலாந்து அணிகள் இடையே அடுத்த மாதம் டெஸ்ட் போட்டி நடக்கிறது. இதற்கு தயாராகும் விதமாகவே இம்ரான்தகீர் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
பாக். வீரர்கள் அதிருப்தி
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அந்நாட்டு வீரர்களுக்கு புதிய சம்பள ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தியது. அப்ரிடி உள்ளிட்ட சில வீரர்களுக்கு ‘ஏ’ கிரேடு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன்மூலம் குறிப்பிட்ட கிரேடு வீரர்கள் 25 சதவீதம் சம்பள உயர்வு பெறுவார்கள். ஒருசில வீரர்களுக்கு 10 சதவீத சம்பள உயர்வுதான் வழங்கப்பட்டுள்ளது. வாரியத்தின் இந்த செயலால் வீரர்கள் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலிங்கா விலகல்
ஐபிஎல் 20,20ல் விளையாடியதால் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா சோர்வடைந்துள்ளதாகவும், இதனால் இங்கிலாந்தில் உள்ள கவுண்டி கிளப்பான மிடில்எக்ஸ் 20,20 ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காம்பீர் சூப்பர் கேப்டன்
ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்காக ஆடிய பிரெட்லீ கூறுகையில், காம்பீரிடம் போராடும் குணம் அதிகம் உள்ளது. வீரர்களிடம் அவர் பழகும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது. களத்தைவிட்டு வெளியே இருக்கும்போது எப்போதும் அவர் ஜோக் அடித்தபடி கலாய்த்து கொண்டிருப்பார் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook