பாஜ ஆர்ப்பாட்டத்தில் உருவ பொம்மை எரித்த பெண் தீயில் கருகினார்
அலகாபாத்: உருவபொம்மை எரித்த போது பாஜ தலைவி தீயில் கருகி படுகாயம் அடைந்தார். உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்ட பாஜ பெண்கள் அணி தலைவி பல்லவி சிங். பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அலகாபாத்தில் நேற்று நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது உருவபொம்மை எரித்தபோது, பல்லவி சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. உடல் முழுவதும் தீ பரவியதால் அலறி துடித்தார். அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.