புதுப்பட, ஆபாச டிவிடி விற்பனை: 9 பேர் கைது
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில் புதுப்பட டிவிடிக்கள் விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம், உத்திரமேரூர், மறைமலைநகர் பகுதியில் புதுப்படம் மற்றும் ஆபாச பட டிவிடிக்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உத்திரமேரூர் போலீஸ் எஸ்ஐ சத்தியவாணி மற்றும் போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர். உத்திரமேரூர் பஸ் நிலையம், என்டத்தூர், மறைமலை நகரில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி, 300 புதுப்பட டிவிடிக்கள் மற்றும் 100 ஆபாச பட டிவிடிக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுசம்பந்தமாக, உத்திரமேரூரை சேர்ந்த சுப்பிரமணி (42), எல்லப்பன் (36), ஜெயபால் (31), மறைமலைநகரை சேர்ந்த விஜயகுமார் (60). பாபு (38). ராஜேஷ் (25), கூடுவாஞ்சேரியை சேர்ந்த சதீஷ் (26), குமார் (27), ரமேஷ்பாபு (41) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.