மணல் கடத்திய லாரி பறிமுதல் டிரைவர் கைது
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் போலீசார் நேற்று வானக சோதனை செய்தனர். அப்போது செங்கல்பட்டு அடுத்த பாலூர் ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை மடக்கி பிடித்தனர். மணல் கடத்தி வந்த திம்மாவரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஜெயசீலன் (35) என்பவரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.