நித்யானந்தா நியமனம் குறித்து கருத்து காஞ்சி ஜெயேந்திரருக்கு தேவையில்லாத வேலை: மதுரை ஆதீனம் கண்டனம்
மதுரை: மதுரை ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டது குறித்து கருத்து சொல்வது காஞ்சி ஜெயேந்திரருக்கு தேவையில்லாத வேலை என்று மதுரை ஆதீனம் கூறினார். மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமிக்க எனக்கு முழு உரிமை உள்ளது. எனவே தான் அவரை நியமித்தேன். நித்யானந்தா நியமனம் குறித்து காஞ்சி ஜெயேந்திரர் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன். இது அவருக்கு தேவையில்லாத வேலை. ஏற்கனவே நான் உடல், மன ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து நித்யானந்தா நிருபர்களிடம் கூறுகையில், யாரோ சொன்னதைக் கேட்டு காஞ்சி ஜெயேந்திரருக்கு பேட்டி தந்துள்ளார். என்னுடன் ரஞ்சிதா இருப்பதாகவும், செல்லும் இடமெல்லாம் அவரும் வருவதாகவும் சொல்லியிருக்கிறார். 10 நாட்களுக்குள் இந்த வார்த்தையை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன். நான் பொறுமையாக போகிறேன். அதனால் நான் பலசாலி இல்லை என யாரும் நினைக்க கூடாது’’ என்றார்.