எஸ்ஐ மீது இட்லி மாவை ஊற்றிய பெண் கைது
கோவை: கோவை குனியமுத்தூரை சேர்ந்த கமால் பாட்ஷா மனைவி ரஹானா கமால் (32). கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி ரோட்டில் நடமாடும் டிபன் கடை நடத்தி வந்தார். இதனால் வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக வங்கி அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். ரேஸ்கோர்ஸ் பெண் எஸ்.ஐ. ஆனந்தஜோதி, நேற்று அப்பகுதிக்கு சென்று கடையை அப்புறப்படுத்தும்படி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ரஹானா பிளாஸ்டிக் பாத்திரத்தில் இருந்த இட்லி மாவை எடுத்து ஆனந்தஜோதி மீது கொட்டினார். இதில் அவரின் சீருடை முழுவதும் நாசமானது. எஸ்.ஐ. ஆனந்தஜோதி அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து ரஹானாவை கைது செய்தனர்.