கல்லூரி நிர்வாகம் டிசி கொடுத்ததால் இன்ஜினியரிங் மாணவன் தற்கொலை: கொரட்டூரில் சோகம்
ஆவடி: கொரட்டூரில் இன்ஜினியரிங் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்பத்தூர் அருகே கொரட்டூர் பாரதி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ஜெயகர் (18). தனியார் பொறியியல் கல்லூரி மாணவர். நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். இரவு சாப்பிட்டு முடிந்ததும் தனி அறையில் தூங்கினார். நள்ளிரவில், மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் இதை பார்த்த பெற்றோர், மகன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கொரட்டூர் போலீசில் ரவி புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில், ‘ஜெயகருக்கு வரும் 15ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. அவருக்கு பல்வேறு பாடங்களில் அரியர்ஸ் உள்ளது. இந்நிலையில் கல்லூரி நிர்வாகம், ஜெயகருக்கு திடீரென டி.சி. கொடுத்துள் ளது. இதனால் மனம் உடைந்து அவர் வீட்டில் தற்கொலை செய்துள்ளார்Õ என்பது தெரிந்தது. போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.