Untitled Document
2012
10
May
30 மணி நேரம் ஆம்புலன்சில் இருந்த ஸ்ரீரங்கம் ஜீயர் உடல் அடக்கம்: போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது


திருச்சி: 30 மணிநேரம் ஆம்புலன்சில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் ஜீயர் உடல் போலீஸ் பாதுகாப்புடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் பலஹாரி புருஷோத்தமன் ராமனுஜ ஜீயர் மடம் உள்ளது. இந்த மடத் தின் 4வது ஜீயராக இருந்தவர் ஸ்ரீலட்சுமண ராமானுஜ ஜீயர் (90). கடந்த 6ம்தேதி கொல்கத்தாவில் முக்தியடைந்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து ஆம்புலன்சில் நேற்று அதிகாலை ஸ்ரீரங்கம் வந்தடைந்தது. உடலை பெற்றுக் கொண்ட பத்ரிநாராயணன் மற்றும் அவரது சீடர்கள் ராமானுஜ மடத்திலேயே ஜீயரின் உடலை வைக்க முயற்சித்தனர். ஆனால் மடம் தொடர்பான பிரச்சினை காரணமாக மட நிர்வாகத்தை கவனித்து வரும் இந்து அற நிலையத்துறை அதிகாரிகள் இதை ஏற்க மறுத்து விட்டனர். இருப்பினும் பத்ரிநாராயணன் விடாப்பிடியாக இருந்ததால் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஜீயரின் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் எழுந்தது.

இதற்கிடையில் ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ சக்திவேல் தலைமையில் நேற்று நள்ளிரவு வரை  பேச்சுவார்த்தை நடந்தது. ஜீயர் வக்கீல்கள் மற்றும் பத்ரிநாராயணன், போலீஸ் உதவி கமிஷனர் வீராச்சாமி, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மடத்திற்குள் அனுமதிக்க முடியாது என்று அறநிலையத்துறையும், ஒரு நாள் மட்டும் அனுமதி க்க வேண்டும் என்ற ஜீயர் தரப்பினரும் பிடிவாதமாக இருந்ததால் பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்பட வில்லை. திருவானைக்காவல் ட்ரங்க் ரோட்டில் சுமார் 30 மணி நேரமாக ஆம்புலன்சில் ஜீயர் உடல் இருந்தது.  இந்நிலையில் இன்று காலை மீண்டும் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், அவரது உடல் மடத்துக்கு முன்பு 5 நிமிடம் வைக்கப்பட்டது. ஜீயருக்கான மரியாதை செய்த பின் போலீஸ் பாதுகாப்புடன் கொள்ளிட கரைக்கு எடுத்து செல்லப்பட்டது.  பிலகாரி புருசோத்தம ராமனுஜ மடத்தின் பிருந்தாவனத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
MARIAPPAN V K - PONDICHERRY
5/11/2025 -- 11:5:5

பெண் பித்தர்களுக்கு கிடைக்கும் இறுதி மரியாதை இதுதான். கடவுளின் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு காம விளையாட்டுக்களில் ஈடுபடும் நித்தி, சங்கராச்சாரி மற்றும் அருணகிரி இவர்களுக்கு இது ஒரு பாடம்.

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,