இயக்குனர்கள் எதிர்ப்பு டைட்டில் பஞ்சாயத்து
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...
கோலிவுட்லேருந்து சான்டல்வுட் படங்கள்ல கவனத்தை திருப்பிய ரமேஷான நடிகரு, இப்போ மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்புறாராம்... திரும்புறாராம்... சான்டல்வுட்லதான் நடிச்ச¤, இயக்கிய படங்களை கோலிவுட்ல ரீமேக் பண்ண பிளான் பண்றாராம். அதுக்கு அச்சாராமா அங்கு நடிச்ச ‘நம் அண்ணா டான்Õ படத்தை ரீமேக் செய்ய யோசிச்சாராம். ஆனா சான்டல்வுட்ல அந்த படம் ஊத்திகிச்சாம்... ஊத்திகிச்சாம்... முதல் பிளானே சொதப்பினதால மூட் அவுட் ஆயிட்டாராம். ரீமேக் ஐடியா கைவிட்டுட்டாராம்... விட்டுட்டாராம்...
ரன் இயக்கம் கால்ல லவ் இயக்கம் விழுந்தது இண்டஸ்ட்ரில பிரச்னையை கிளப்பிடுச்சாம்... கிளப்பிடுச்சாம்... வழக்கமா ஜூனியருங்கதான் சீனியர் கால்ல விழுவாங்க. ஆனா ஒரு சீனியர் டைரக்டர், ஜூனியர் கால்ல விழுறதை தடுக்காம ரன் இயக்கம் அதை ஏத்துக்க¤ற மாதிரி நின்னது தப்புன்னு பல இயக்குனருங்க எதிர்ப்பு தெரிவிக்கிறாங்களாம்... தெரிவிக்கிறாங்களாம்...
காதல்ல சொதப்புற ஹீரோ நடிக்க¤ற படத்துக்கு நேஷனல் ஹைவேன்னு பேர் வச்சாங்களாம்... வச்சாங்களாம்... ஆனா, தன்னையே பவரான ஸ்டார்னு பிரபலப்படுத்திக்கிற மருத்துவ நடிகரு தன்னோட படத்துக்கும் அதே டைட்டிலை வச்சிருக்காராம்... வச¢சிருக்காராம்... இது பிரச்னையா வெடிக்குதாம். ரெண்டுபேர்ல யார் டைட்டில மாத்தப்போறீங்கன்னு கேட்டா ரெண்டுபேருமே மறுக்க¤றாங்களாம்... மறுக்கிறாங்களாம்... இதனால பிரச்னை கவுன்சிலுக்கு போகப்போகுதாம்... போகுதாம்...