காமெடிதான் இப்போது டிரெண்ட்: சொல்கிறார் இயக்குனர்
சென்னை: காமெடிதான் இப்போது டிரெண்ட் என்றார் இயக்குனர் வியாசன். ‘லொள்ளு தாதா பராக் பராக் பட இயக்குனர் வியாசன் கூறியதாவது: வங்கிகள் எந்த உத்தரவாதமும் இல்லாமல் யாருக்கும் கடன் கொடுப்பதில்லை. அதிலும் வராக்கடன் என்று பலகோடிகள் முடங்கிக்கிடக்கின்றன. ஆனால் ஊருக்குள் யாரிடமும் எந்த உத்தரவாதமும் இல்லாமல் கடன் தருகிறார் லொள்ளு தாதா. அவரிடம் கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி கட்டினார்களா? அதை லொள்ளு தாதா எப்படி வசூலிக்கிறான்? என்பதுதான் கதை. லொள்ளு தாதா என்ற காமெடி கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் நடிப்பதுடன் பாடல் எழுதி இசை அமைத்து தயாரிக்கிறார். ‘பயங்கர வில்லன், தீவிரவாதி என நெகடிவ் கதாபாத்திரங்கில் நடித்துள்ள மன்சூர் அலிகானுக்கு காமெடி பொருந்துமா? என்கிறார்கள். அந்தந்த வேடத்துக்கு ஏற்ப பாவனைகளும், பாடிலாங்குவேஜும் பொருத்தமாக இருந்தால் யாருக்கும் எந்த வேடமும் பொருந்தும். தில்லாலங்கடி உள்பட சில படங்களில் காமெடி போலீசாக அவர் நடித்தது எடுபட்டது.