பஞ். தலைவரை ஈட்டியால் குத்திய வாலிபர் கைது
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இளங்குடி ஊராட்சித் தலைவர் சங்கர்(36). இதே பகுதியைச் சேர்ந்தவர் வல்லவன். இவர்களுக்கு இடையே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு நடந்த இளங்குடி முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழாவில் சங்கருக்கும், வல்லவனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வல்லவன், சங்கரை ஈட்டியால் சரமாரியாக குத்தினார். இதில் காயமடைந்த சங்கரை அவரது உறவினர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். வல்லவனை(36) திருவேகம்பத்தூர் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.