வீனஸ் தோல்வி ஸ்பெயினில் நடந்து வரும் டென்னிஸ் போட்டி 2வது சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 4,6, 1,6 என்ற நேர்செட்டில் ஜெமர்னியின் ஹெர்பரிடம் தோல்வியடைந்தார். லூக்ரைட்டுக்கு ‘டெங்கு’ ஐபிஎல்லில் புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடிவரும் இங்கிலாந்து வீரர் லூக்ரைட் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். தாயகம் சென்றிருந்த அவர் தற்போது புனே அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார். கென்யா கோச் விலகல் கென்ய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மைக்ஹசன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். காம்பீர் சூப்பர் கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ கூறுகையில், காம்பீர் மிகச்சிறந்த கேப்டன். தலைமை பண்பு அவரிடம் இயற்கையாகவே அமைந்துள்ளது என்றார். ஐபிஎல் அணிகள் ஆலோசனை ஐபிஎல் 6வது சீசனுக்காக இப்போதே அணி ஓனர்கள் ஆலோசனையை துவங்கி விட்டனர். 6வது சீசனில் எந்தெந்த வீரர்களை அப்படியே தக்க வைத்து கொள்ளலாம், யாரை ஏலம் எடுக்கலாம், மற்ற அணிகளில் இருந்து வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்வது குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook