மனைவியுடன் செல்போனில் பேச்சு கண்டித்த கணவருக்கு அடிஉதை
பாவூர்சத்திரம் :நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் வேளார் பெரிய தெருவை சேர்ந்தவர் சுந்தர் (32). இவரது மனைவி மாரியம்மாள். இவரிடம் கீழப்பாவூர் யூனியன் ரோட்டைச் சேர்ந்த குத்தாலிங்கம் (34) என்பவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதனை சுந்தர் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த குத்தாலிங்கம், அவரது சகோதரர்கள் செல்வன், பழனி மற்றும் உறவினர் தங்கதுரை ஆகியோர் சுந்தர் மற்றும் அவரது அண்ணன் ரத்னசாமி ஆகியோரை அவதூறாக பேசி அடித்து உதைத்துள்ளனர். மேலும் கம்பால் தாக்கி, கொலை மிரட்டலும் விடுத்தனர். காயமடைந்த அண்ணன், தம்பி இருவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி குத்தாலிங்கத்தை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.