குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
பட்டுக்கோட்டை :தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் மேலசூரியதோட்டத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(38). இவருடைய மகன் ராஜசேகரன்(12)6ம் வகுப்பு படித்து வந்தான். ரவிச்சந்திரனின் உறவினர் பட்டுக்கோட்டை மணியார்புரத்தை சேர்ந்த வீரமணி மகன் நந்தகுமார்(6), 1ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுமுறைக்காக மதுக்கூரில் உள்ள உறவினர் ரவிச்சந்திரன் வீட்டுக்கு சிறுவன் நந்தகுமார் வந்திருந்தான். நேற்று ராஜசேகரனும் நந்தகுமாரும் படப்பைக்காடு படப்பைக் குளத்தில் குளிக்க சென்றனர். குளித்து கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி ராஜசேகரன், நந்தகுமார் இருவரும் இறந்தனர்.