கல்லூரி மாணவி பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
நெல்லை :சங்கரன்கோவில் அருகே வடக்கு அழகுநாச்சியாபுரத்தை சேர்ந்தவர் சிவரஞ்சனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அருகில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அழகனேரி மெயின்ரோட்டை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் ரஞ்சித்குமார்(20) என்பவர் சிவரஞ்சனியை ஒருதலையாக காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த 9,6,2009ல் கல்லூரி முடிந்து சிவரஞ்சனி வீடு திரும்பியபோது, அழகனேரியில் ரஞ்சித்குமார் வழிமறித்துள்ளார். சிவரஞ்சினியை தூக்கி சென்று தனது வீட்டில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிவரஞ்சனி அளித்த புகாரின்பேரில் சங்கரன்கோவில் தாலுகா மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு நெல்லை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ரஞ்சித்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.