அரசு ஊழியர் மனைவியிடம் 3 பவுன் பறிப்பு
கீழ்பாக்கம் :திருமண வரவேற்புக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் 3 பவுன் செயினை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடுகின்றனர். சென்னை கொசப்பேட்டையை சேர்ந்தவர் கன்னிபாபு (59). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி மகேஸ்வரி (49), தலைமைச் செயலக காலனி பராக்கா ரோட்டில் நடந்த திருமண வரவேற்புக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது பைக்கில் வந்த ஒரு வாலிபர், திடீரென மகேஸ்வரி அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தலைமறைவானார். இதுகுறித்த புகாரின்பேரில், தலைமைச்செயலக காலனி போலீசார் வழக்கு பதிந்து பைக் ஆசாமியை தேடி வருகின்றனர்.