Untitled Document
2012
05
May
பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தை, இங்கிலாந்து மாகாண இளவரசர் பார்வையிட்டார்


ஆலந்தூர் :பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி அதிகாரிகள் மைய பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பரங்கிமலை ராணுவ பயிற்சி அதிகாரிகள் மையத்தை பார்வையிட இங்கிலாந்து நாட்டின் யார்க் மாகாண இளவரசர் ஆன்ட்ரூ, நேற்று வந்தார். அவரை லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.எஸ்.ஜோக், வரவேற்றார். பின்னர் அங்குள்ள வெள்ளை மாளிகையில், அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர், 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட ராணுவ பயிற்சி மையத்தை, அங்குள்ள மலை உச்சியில் இருந்து பார்வையிட்டார். மேலும், பயிற்சி அகடமி நூலகம், அதிகாரிகள் அலுவலகம் ஆகியவற்றையும் பார்த்தார். மாலையில், நந்தம்பாக்கத்தில், போரில் இறந்தவர்களின் சமாதிகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் ஹைகமிஷனின் துணை ஆணையர் மைக் நித்திய பிரியங்கிஸ், பயிற்சி மைய துணை அதிகாரி ராஜவேலு, கேப்டன் மிட்டல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,