Untitled Document
2012
05
May
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அபிஷேக் சிங்வியை தூக்கில் போட வேண்டும்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மும்பை :பெண் உதவியாளருடன் நெருக்கமாக இருப்பது போன்ற சிடி சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் சிங்வியை தூக்கில் போட வேண்டும் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறினார். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும், சட்டம் மற்றும் நீதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராகவும் இருந்தவர் அபிஷேக் சிங்வி. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தனது பெண் உதவியாளருடன் நெருக்கமாக இருப்பது போன்ற சிடிக்கள் கடந்த மாதம் சமூக வலைதளங்களில் வெளியானது. இவரிடம் பணிபுரிந்த டிரைவர் இந்த சிடியை வெளியிட்டது தெரியவந்தது. இது போலி என அபிஷேக் மறுத்தார். டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சிடி வெளியிட தடை வாங்கினார்.

இதற்கிடையே காங்கிரஸ் மேலிட உத்தரவை ஏற்று நிலைக்குழு தலைவர் பதவி மற்றும் செய்தி தொடர்பாளர் பதவிகளை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிராவில் வலுவான லோக் ஆயுக்தா வலியுறுத்தி சுற்றுப்பயணம் செய்து வரும் அன்னா ஹசாரேவிடம் அபிஷேக் சிங்வி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஆவேசமாக பதில் அளித்த அன்னா, ‘அபிஷேக் சிங்வி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கில் போட வேண்டும்’ என்றார். வலுவான லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஊழல்பேர்வழிகள் இந்நேரம் சிறையில் இருப்பார்கள் எனவும் அவர் கூறினார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,