கலெக்டர் அலெக்ஸ் திடீர் மாற்றம்
ராய்ப்பூர் :சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நேற்று விடுவிக்கப்பட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுக்மா மாவட்ட கலெக்டராக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றார். இந்நிலையில், சுக்மா மாவட்ட கலெக்டர் பொறுப்பில் இருந்து அலெக்ஸ் இன்று திடீரென விடுவிக்கப்பட்டுள்ளார். தண்டேவாடா மாவட்ட கலெக்டர் சவுத்ரி, கூடுதல் பொறுப்பாக சுக்மா மாவட்ட நிர்வாகத்தை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலெக்ஸ் மாற்றத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.