சென்னை :மலைக்கோட்டை ரயில் மேற்கூரையில் எரிந்த நிலையில் பெண் சடலம் கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு இன்று காலை 5.15 மலைக்கோட்டை ரயில் வந்தது. அதிலிருந்து பயணிகள் இறங்கி சென்றனர். இதையடுத்து ரயில்வே போலீசார், ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது, ரயில் பெட்டியின் மேற்கூரையில் ஒரு பெண்ணின் உடல் கிடந்தது தெரிய வந்தது. துணிகள் எரிந்த நிலையில் காணப்பட்டது. மஞ்சள் நிற சேலை, பச்சை நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். 40 வயது இருக்கும். தகவலின் பேரில் எழும்பூர் ரயில்வே போலீஸ் எஸ்ஐ லோகநாதன், விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விசாரணையில், எரிந்த நிலையில் கிடந்த பெண் ரயிலில் பழம் விற்பவர் என்று தெரிந்தது. சேத்துப்பட்டில் அதிகமாக வியாபாரிகள் தங்குவார்கள். அங்குதான் பெட்டியில் டமார் என சத்தம் கேட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது அவரே குதித்து இறந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook