Untitled Document
2012
04
May
4 வெற்றி கட்டாயம் தேவை : நெருக்கடியில் சென்னை அணி


ஐபிஎல்லில் இன்று ஒரேயொரு ஆட்டம் மட்டுமே நடக்கிறது. இரவு 8 மணிக்கு சேப்பாக்கத்தில் சென்னை , ஐதராபாத் மோதுகின்றன. சென்னை அணி 10 ஆட்டத்தில் 4 வெற்றி, 5 தோல்விகளை பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது. இன்றைய ஆட்டத்துடன் சேர்த்து சென்னை அணிக்கு மொத்தம் 6 போட்டிகள் உள்ளது. இதில் 4 ஆட்டத்தில் ஜெயித்தால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு கிட்டும் என்ற நெருக்கடியுடன் சென்னை அணி வீரர்கள் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கின்றனர். சொந்த மைதானத்தில் ரன் குவிக்க சென்னை அணி கடுமையாக திணறி வருகிறது. பஞ்சாப், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. ரெய்னா, டோனி ரன் குவிக்க திணறுகின்றனர். ஹசி வருகையால் எந்தவித மாற்றமும் இல்லை. மீண்டும் முரளி விஜய்க்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். பிராவோ, ஜடேஜா ஆகியோர் பேட்டிங்கில் அதிரடி காட்டினால் வெற்றிக்கு வழி வகுக்கலாம். ஐதராபாத் அணி தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்தாலும் புனே அணியை இரு முறை வீழ்த்தியுள்ளது. டுமினி காயமடைந்துள்ளது அணியை மேலும் பலவீனமாக்கியுள்ளது. சங்ககரா ரன் குவிக்க துவங்கியுள்ளது ஓரளவு நம்பிக்கையை கொடுத்துள்ளது. கேமரூன் ஒயிட் அதிரடி வீரராக உள்ளார். அமித் மிஸ்ரா சுழல் நெருக்கடி கொடுக்க கூடும்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,