என்எல்சி தொழிலாளர் ஸ்டிரைக் தமிழக அரசு தலையிடாது அமைச்சர் தகவல்
சென்னை :நெய்வேலி அனல் மின்நிலைய தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழக அரசு தலையிடாது என்று சட்டசபையில் அமைச்சர் செல்லபாண்டியன் கூறினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் வால்பாறை ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), திண்டுக்கல் பாலபாரதி (மார்க்சிஸ்ட்) ஆகியோர், நெய்வேலி அனல்மின் நிலைய (என்எல்சி) தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். அதற்கு பதில் அளித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் கூறியதாவது: நெய்வேலி அனல் மின்நிலைய தொழிலாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனல் மின்நிலையம் முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம். எனவே, அந்த நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்தில் மாநில அரசு தலையிடாது. இவ்வாறு அமைச்சர் செல்லபாண்டியன் கூறினார்.