நாளை தொடங்குகிறது கத்திரி
சென்னை :கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் கத்த¤ரி வெயில் நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதன் காரணமாக சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை எட்டியது. இதற்கிடையே, கடந்த சில நாட்களாக பல இடங்களில் கோடை மழை பெய்து. இது வெயிலின் தாக்கத்தை குறைத்துள்ளது. ஆனால் சென்னை நகரில் மட்டும் ஒரு சில தினங்களுக்கு முன்பு லேசான மழை பெய்தது. இது மேலும் வெப்பத்தை அதிகரித்துவிட்டது. கொதிக்கும் வெயில் காரணமாக சாலைகளில் கானல் நீர் காட்சியை காணமுடிகிறது. இந்நிலையில், வெயில் உச்சமான அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது. இதன் காரணமாக சுமார் 25 நாட்களுக்கு கடுமையான கத்த¤ரி வெயில் தாக்குதல் இருக்கும். கத்திரி வெயிலை சமாளிக்க இளநீர், ஜூஸ், மோர், தர்பூசணி போன்றவற்றை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும். கத்தரி வெயிலை சமாளிக்க அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்ந்த பானங்கள் அருந்த வேண்டும். முதியவர்கள், நோயாளிகள் வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். கொளுத்தும் வெயிலில் குழந்தைகள் வெளியில் விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.