மாஸ்கோ :அழகு பெண்களை மெழுகு பொம்மையுடன் ஒப்பிடுவார்கள். ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் அச்சு அசலாக பார்பி பொம்மை போலவே இருக்கிறார். சிறுமிகள் உள்பட பெண்கள் அனைவருக்கும் பிடித்தமான பொம்மை ‘பார்பி’. அமெரிக்காவின் மேட்டல் நிறுவனத்தின் தயாரிப்பு. கடந்த 52 ஆண்டுகளில் பல வடிவங்கள், பல கெட்டப்களில் விதவிதமான பார்மி பொம்மைகள் வந்துவிட்டன. அழகு பொம்மை என்றால் பார்பிதான் சட்டென நினைவுக்கு வரும். அதற்கே சவால் விடும் வகையில் அழகுப் பதுமை போல போஸ் கொடுக்கிறார் ரஷ்யாவை சேர்ந்த மாடல் அழகி வேலரியா லுக்யனோவா. வயது 21. தங்க நிறத்தில் நீள நீளமான கூந்தல், ஓவியம் தீட்டியது போன்ற விழிகள், பளபள மேனி, செதுக்கியது போன்ற மூக்கு, சுண்டியிழுக்கிற உதடு, மெலிதான இடுப்பு, எடுப்பான முன்னழகு.. என அச்சு அசலாக பார்பி பொம்மை போலவே இருக்கிறார் வேலரியா.
முழு மேக்கப்பில் வந்து நின்றால், உயிருள்ள பெண்தானா, பொம்மையா என்ற சந்தேகம் வரும். அந்தளவுக்கு பொம்மை போல காட்சியளிக்கிறார். அட, நான் மெய்யாலுமே பொண்ணுதாங்க என்று நிரூபிக்கிற வகையில், பேஸ்புக் மற்றும் தனது பிளாக்கில் மேக்கப் அற்ற போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார். மேக்கப் இல்லாத முகத்தில் தொடங்கி, ஒவ்வொரு மேக்கப்பாக போட்டுக் கொண்டு கடைசியில் பொம்மை போல மாறுவதையும் யூ,டியூபில் வெளியிட்டுள்ளார். ரஷ்யாவில் மட்டுமின்றி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஏராளமானோர் இந்த பதுமையின் அழகை பார்த்து அசந்து போயிருக்கிறார்கள். சமூக இணையதளங்களில் வேலரியாவின் ரசிகர்கள் எண்ணிக்கை சமீபகாலத்தில் இரட்டிப்பு ஆகியிருக்கிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook